குருநாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய கல்வி வலயத்தில் பண்டுவஸ் நுவர கல்வி கோட்டத்தில் ஹெட்டிபொல எனும் நகரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் வடக்கில் மடிகே அனுக்கன எனும் அழகிய கிராமத்தில் குளி /மடிகே அனுக்கன முஸ்லீம் மகா வித்யாலயம் அமையப்பெற்றுள்ளது.
குளி மடிகே அனுக்கன முஸ்லீம் மகா வித்யாலயம் கிராமவாசியான எம் .என்.எல்.அப்துல் ஹமீது என்பவரால் அன்பளிப்பு செய்யப்பட்ட 2ஹெக்டேயர் பரப்பில் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் திகதி உருவாக்கப்பட்டது .இப் பாடசாலை உருவாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியருடன் ஆரம்பிக்கப்பட்டது. 1975 ம் ஆண்டு க.பொ.த [சா/த]வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது.2002 ம் வருடம் க.பொ.த [உ /த] வகுப்புக்கள் ஆரம்பிக்க முடியுமாக இருந்தது.
சிறந்த கல்வி அபிவிருத்தி காரணமாக தரம் 5 புலமை பரிசில் பரீட்சை, க.பொ.த [சா/த],க.பொ.த [உ/த] பரீட்சசைகளில் சிறந்த பெறுபேற்றை பெற்று மிளிர்வதனால் குருநாகல் மிகவும் பிரசித்தம் பெற்ற பாடசாலையாக எமது பாடசாலை திகழ்கிறது.






